உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

மறைமலைநகர்:மறைமலைநகர் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாம்பரம் போக்குவரத்து காவல் துறை உதவி கமிஷனர் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தாம்பரம் போக்குவரத்து காவல் துறை இணை கமிஷனர் சமய்சிங் மீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சாலை விதிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு விளக்கினார்.தொடர்ந்து, 100 வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து போலீசார், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை