மேலும் செய்திகள்
படகு இல்லத்துக்கு ஜாலி 'டிரிப்' போகலாம்
06-Apr-2025
திருப்போரூர்:தையூரில் உள்ள ஐ.ஐ.டி., மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில், நீர்நிலைகளில் உள்ள குப்பையை அகற்றும் தொழில்நுட்ப ஆளில்லா 'ரோபோ' படகு சோதனை போட்டி நடந்தது.ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் அமைப்பான 'பால்ஸ்' சார்பில் 'ஏ.சி.டி.சி., ஹேக்கத்தான்' என்ற தலைப்பில், பல்வேறு நீர்நிலைகளில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் வகையிலான, தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகுகளை வடிவமைத்து சோதனை நடத்தும் போட்டி, தென்மாநில அளவில் நடத்தப்பட்டு வந்தது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 51 பொறியியல் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.கடந்த ஓராண்டாக நடந்து வந்த போட்டியில், அவரவர்கள் வடிவமைத்த தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகுகளை சோதன ஓட்டத்தில் சமர்ப்பித்தனர்.இதில், 6 கல்லுாரிகளைச் சேர்ந்த 8 குழுவினர் வடிவமைத்த ஆளில்லா ரோபோ படகுகள், முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டன.இதையடுத்து, இதற்கான இறுதி போட்டி, கேளம்பாக்கம் அடுத்த தையூரில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், 6 கல்லுாரிகளைச் சேர்ந்த 8 குழுவினர் வடிவமைத்த ஆளில்லா ரோபோ படகுகளை, சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தினர்.இதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜி ராமக்கிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் காமகோடி, ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் சந்திரசேகரன், ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர் அனுராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
06-Apr-2025