உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சிறுதாவூரில் சமூக நலக்கூடம் கட்ட ரூ.80 லட்சம் ஒதுக்கீடு

 சிறுதாவூரில் சமூக நலக்கூடம் கட்ட ரூ.80 லட்சம் ஒதுக்கீடு

திருப்போரூர்: சிறுதாவூர் ஊராட்சியில், புதிய சமூக நலக் கூடம் கட்ட 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய சிறுதாவூர் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயம் மற்றும் கட்டட தொழில் செய்யும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சமூக நலக்கூடம் இல்லாததால், மக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை திருப்போரூர், மானாமதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில், அதிக கட்டணம் செலுத்தி நடத்தி வருகின்றனர். இதனால், பொருளாதார சிக்கலும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் புதிதாக சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து மனு அளித்து வந்தனர். இதையடுத்து, இப்பகுதியில் புதிய சமூக நலக்கூடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தரைத்தளம் 2,228 சதுர அடியிலும், முதல் தளம் 1,874 சதுர அடியிலும் கட்ட, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ