மேலும் செய்திகள்
தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது
23-Sep-2024
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பாக, சங்கம் துவங்கிய விஜயதசமி நாளை ஒட்டி, மறைமலை நகரின் முக்கிய வீதிகளில், அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.ஊர்வலத்தை, மாலை 4:15 மணிக்கு, சமூக ஆர்வலர் அறிவழகன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மறைமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக, இசைவாத்தியம் முழங்க அணிவகுத்து சென்றனர்.இந்த அணிவகுப்பு, மறைமலை நகரின் பாவேந்தர் சாலையில் துவங்கி, திருவள்ளுவர் சாலை, வள்ளல் எம்.ஜி.ஆர்., சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக, நகரின் முக்கிய வீதிகளில் சென்று, மீண்டும் பாவேந்தர் சாலையில் முடிவடைந்தது.இதில், 200க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர்.மாலை, 5.30 மணிக்கு, மறைமலை நகர் பாவேந்தர் சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், 'தற்காலச் சூழலில் ஹிந்துத்துவா' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது.
23-Sep-2024