ஊரக வளர்ச்சி துறையினர் அச்சிறுபாக்கத்தில் போராட்டம்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செ ங்கல்பட்டு மாவட்டம், அச்சி றுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர், உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு, அரசு உரிய நிதி அளிக்க கோரி, கருப்பு பட்டை அணிந்து, அலுவலக பணி புறக் கணிப்பு செய்து, போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 59 ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்து வருகிறது. முகாமிற்கு ஏற்படும் பந்தல், ஒலி, ஒளி அமைப்பு, 15 துறைகளுக்கு விளம்பர பதாகைகள் அச்சடித்தல், அலுவலர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான செலவினங்களுக்கு அரசு உரிய நிதி வழங்காமல் உள்ளது. இதனால், அலுவலர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும், பணி நாட்களில், மூன்று நாட்கள் முகாம் நடைபெறுவதால், முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கான தீர்வு மற்றும் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் தினப் பணிகள் பாதிக்கப்படுவதால், அதிகாரிகள் மன உளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர். இவ்வாறு கூறி னார்.