உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூவத்துார் பகுதியில் கள் விற்பனை ஜோர்

கூவத்துார் பகுதியில் கள் விற்பனை ஜோர்

கூவத்துார்:கூவத்துார் மற்றும் சுற்றுபுற பகுதிகளில், பனை கள் விற்பனை அமோகமாக உள்ளது. பிற பகுதியினர் கள் அருந்த படையெடுக்கின்றனர். கோடை காலத்தில், கிராமத்தினர், பனைமர கள் அருந்துவது வழக்கம். டாஸ்மாக்கில் அதிகவிலை மது வாங்க இயலாதவர்கள், விரும்பி கள் அருந்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், பனைமரங்கள் நிறைந்துள்ள, கூவத்துார், வடபட்டினம், தென்பட்டினம், கானத்துார், முகையூர், செய்யூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில், கள் இறக்கப்படுகிறது.பனை தொழிலாளர்களான, மரத்தின் உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள், பனைமரங்களில், மண்பானை பல்லா கட்டி, அதில் கள் வடியும் கள்ளை சேகரித்து விற்கின்றனர். கள் இறக்குவது சட்டவிரோதம் எனினும், இப்பகுதிகளில் கோடை சீசனில், அமோகமாக கள் இறக்கப்படுகிறது. சீசன் துவங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில், கள் விற்பனை, தற்போது அமோகமாக நடக்கிறது. போலீசார், பெயரளவிற்கே தடுத்து, கண்டுகொள்வதில்லை. சென்னை உள்ளிட்ட பகுதியினர், கள் அருந்த, இப்பகுதிகளுக்கு தற்போது படையெடுக்கின்றனர். கேனில் வாங்கி சென்று, வாயலுார் தடுப்பணை போன்ற தனிமைப் பகுதிகளில் முகாமிட்டு, அபாய சூழலில் கள் அருந்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை