உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாடு அலங்கார பொருட்கள் பொங்கலுக்கு விற்பனை ஜோர்

மாடு அலங்கார பொருட்கள் பொங்கலுக்கு விற்பனை ஜோர்

திருப்போரூர், திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கலையொட்டி, மாடுகளை அலங்கரிக்க விதவிதமான கயிறுகள் மற்றும் கழுத்தில் தொங்கவிடும் மணிகள் விற்பனை களைகட்டி உள்ளது.தை பொங்கலை கொண்டாடி வரும் தமிழர்கள், மாட்டு பொங்கல் அன்று, விவசாயத்திற்காக உழைத்த மாடுகளுக்கு விடுமுறை விட்டு, அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.அதற்காக, மாடுகளை குளிப்பாட்டி பொட்டு, குங்குமம் வைத்து, மாடுகளின் கழுத்து, கொம்பு, மூக்கில் புதிய கயிறு மாட்டி, கொம்பு சீவி அதற்கு வண்ணம் தீட்டி, மாலையில் வண்டி பூட்டி தெருவில் சுற்றி வருவர்.இந்நிலையில், மாடுகளுக்குத் தேவையான கயிறுகள், மணிகள் போன்றவை திருப்போரூர் மற்றும் ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. விற்பனையும் களைகட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை