மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
23-Nov-2024
செய்திகள் சில வரிகளில்...
23-Nov-2024
மாமல்லபுரம், கலை, பண்பாட்டு துறையின் 'சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' வில், நாட்டுப்புற கலைக்குழுவினர் பங்கேற்க, விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக நாட்டுப்புற கலைகள் மற்றும் கலைஞர்களை பாதுகாத்து வளர்க்கவும், பண்பாட்டு கலாசார முறைகளை கொண்டாடவும், கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும், கலை, பண்பாட்டுத் துறை சார்பில், சென்னையில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.தற்போது, ஜன., பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட உள்ளது. தமிழக நாட்டுப்புற கலைகள், பிற மாநில கலைகள், செவ்வியல் கலைகள் விழாவில் நிகழ்த்தப்படும்.மேலும், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்துார், சேலம், காஞ்சிபுரம், வேலுார் ஆகிய இடங்களிலும், மண்டல கலை பண்பாட்டு மையங்கள் வாயிலாக, நடப்பு நிதியாண்டிற்குள், இத்தகைய விழா நடத்துவதாகவும், கலை, பண்பாட்டு துறை அறிவித்துள்ளது.இதில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுவினர், கலைத்திறமையை வெளிப்படுத்தும், ஐந்து நிமிட வீடியோ காட்சியை, குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிந்து, துறை இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி, அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.மேலும், www.artandculture.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, 044 - 2726 9148 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், பதிவு தபாலை உதவி இயக்குனர், மண்டல கலை, பண்பாட்டு மையம், சதாவரம், கோட்டைக்காவல், ஓரிக்கை, காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு, வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
23-Nov-2024
23-Nov-2024