மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 2,000 ரூபாய். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 6,000 ரூபாய், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பட்ட படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 12.000 ரூபாய், தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு 14,000 ரூபாய் வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற அரசு இ - சேவை மையங்களில், மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள மருத்துவச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம், 2025 - 26ம் நிதியாண்டிற்கான கல்விச்சான்று போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.