உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மயங்கி விழுந்து செக்யூரிட்டி பலி

மயங்கி விழுந்து செக்யூரிட்டி பலி

திருப்போரூர், திருப்போரூர் அருகே மாம்பாக்கத்தில் பணியிலிருந்த காவலாளி, ரத்தம் கக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். வண்டலுார் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பால்வண்ணன், 65. மாம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில், காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் பணியில் இருக்கும் போது, திடீரென ரத்தம் கக்கி, மயங்கி கீழே விழுந்துள்ளார். தகவலின் படி அவசர கால 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவர் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. தகவலின்படி வந்த தாழம்பூர் போலீசார், பால்வண்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை