உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் வாகன நிறுத்தமாக மாறிய சேலையூர் - அகரம்தென் சாலை

தனியார் வாகன நிறுத்தமாக மாறிய சேலையூர் - அகரம்தென் சாலை

தாம்பரம்:தாம்பரம் - வேளச்சேரி சாலையில், கேம்ப் ரோடு சந்திப்பில் இருந்து பிரிந்து செல்லும் சேலையூர் - அகரம்தென் சாலை. 24 மணி நேரமும் போக்குவரத்து கொண்டது.இச்சாலையில், இருபுறமும் அணுகு சாலை போடப்பட்டுள்ளது. இந்த அணுகு சாலை, முழுக்க முழுக்க தனியார் வாகனங்கள் நிறுத்தும் பகுதியாக மாறிவிட்டது.திருவஞ்சேரி சந்திப்பு முதல் திருவஞ்சேரி வரை, இருபுறத்திலும் வேன், கார், லோடு ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் போன்றவை, சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன.இந்திரா நகர் சந்திப்பு, பாரத் காலேஜ் சந்திப்பு அகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு வரும் மதுப்பிரியர்களின் வாகனங்களுக்கு, அணுகு சாலையே பார்க்கிங் பகுதியாக உள்ளது.இதனால், மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. மக்கள் நடந்து செல்வதற்காக போடப்பட்ட நடைபாதை முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.பூச்செடி வைப்பதற்காக கட்டப்பட்டுள்ள பகுதி, அப்பகுதி கடைக்காரர்களின் குப்பை கொட்டும் பகுதியாக மாறிவிட்டது.அதனால், நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை