உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கூடுவாஞ்சேரி:நந்திவரம், நாராயணபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.அதற்கு முன்னதாக, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் இதர வாஸ்து சாந்தியுடன் முதல் கால பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை பூர்ணாஹுதியுடன் மஹா தீபாராதனையும், மாலை 6:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை அஷ்டபந்தனம் சாத்துதல், விக்கிரக பிரதிஷ்டையும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், 6:30 மணிக்கு மணி யாத்ரா தானமும் நடந்தன. தொடர்ந்து புனித நீர் கலசங்களுடன் வலம் வந்த சிவாச்சாரியார்கள், கோபுரத்திற்கு சென்றனர்.அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் தெளித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.இதில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ