உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு சட்ட கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு சட்ட கல்லுாரியில் கருத்தரங்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரியில், சட்டம் மற்றும் நடைமுறைகளின் சமீபத்திய வளர்ச்சியின் முக்கியத்துவம் ஏற்பு என்ற தலைப்பில், மூன்றாமாண்டு, ஐந்தாமாண்டு சட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு, கல்லுாரி முதல்வர் தங்கரமணி தலைமையில், நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி பங்கேற்று பேசுகையில், ''இன்றைய காலகட்டத்தில் சட்டம் மற்றும் நடைமுறையில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களில் மாறுதல்களை, சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்றார். நீதிபதி தமிழ்ச்செல்வி, காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் ஜாங்கிட் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இதில், சட்டக் கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !