உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவுநீர் அனகாபுத்துாரில் சுகாதார சீர்கேடு

கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவுநீர் அனகாபுத்துாரில் சுகாதார சீர்கேடு

பம்மல்:பொழிச்சலுார் ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் தெரு, திரு நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, கலைஞர் தெரு வழியாக கால்வாய் கட்டி, தாம்பரம் மாநகராட்சி, 2வது வார்டு, அனகாபுத்துாரில் இணைத்துள்ளனர்.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்துாரில், நகராட்சியாக இருந்த போது கட்டப்பட்ட கால்வாய், பொழிச்சலுார் ஊராட்சி கழிவுநீரை வெளியேற்றும் அளவிற்கு பெரிதாக இல்லை.சிறிய அகல கால்வாய் என்பதாலும், முறையான வாட்டம் இல்லாததாலும், பொழிச்சலுாரில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அனகாபுத்துார் பாலாஜி நகர், பிருந்தாவன் தெரு, திரு நகர், ராகவேந்திரா சாலை உள்ளிட்ட பகுதிகளில், அப்படியே தேங்கியுள்ளது.பொழிச்சலுார் ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் தெருவின் உட்புற தெருக்களிலும் கூட கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.மாலை 4:00 மணிக்கு மேல் கதவை திறக்க முடியாத அளவிற்கு கொசு தொல்லை பெருகிவிட்டது.துர்நாற்றத்தால் முதியோர், குழந்தைகளுக்கு பல்வேறு தொற்று பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்படியே போனால், மழைக் காலத்தில் இப்பகுதிகள் கழிவுநீரீல் மூழ்கும் அபாயம் உள்ளது. அதனால், மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள், இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை