உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் பாயும் கழிவுநீர் சூணாம்பேடில் சுகாதார சீர்கேடு

சாலையில் பாயும் கழிவுநீர் சூணாம்பேடில் சுகாதார சீர்கேடு

சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.சித்தாமூர் ஒன்றியத்தின் பெரிய ஊராட்சியாக, சூணாம்பேடு உள்ளது.ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், பெருமாள் கோவில் சாலை ஓரங்களில், கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக, இப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தற்போது வரை கால்வாய் அமைக்கப்படவில்லை.இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்தொற்று பரவும் அபாய நிலை நீடிக்கிறது.வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரும், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மேலும், கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, பகுதிவாசிகள் துாக்கமின்றி தவிக்கின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், சூணாம்பேடு பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி