மேலும் செய்திகள்
ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை
29-Dec-2024
அச்சிறுபாக்கம் அச்சிறுபாக்கத்தில், தொண்டை நாட்டு சிவ தலங்களில் ஒன்றான, ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் நேற்று, மார்கழி மாத சனி பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது.இதில், நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.வெள்ளிக்கவசம் அணிவித்து, கோவில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் ஒலிக்க, சங்கொலி முழங்க மஹா தீபாராதனை நடந்தது.இதைத் தொடர்ந்து, நந்தி வாகனத்தில் ஆட்சீஸ்வரரும், இளங்கிளி அம்மனும், கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து, அருள் பாலித்தனர்.இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல் திருப்போரூர், பிரணவ மலை, கைலாசநாதர் கோவிலில் நடைபெற்ற புத்தாண்டு முதல் சனி பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
29-Dec-2024