உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கன்னிமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை தேவை

கன்னிமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை தேவை

சித்தாமூர்:கன்னிமங்கலத்தில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் அருகே கன்னிமங்கலம் கிராமத்தில், வெண்ணாங்குப்பட்டு - மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை பழுதடைந்ததால், சில மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. தற்போது பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், வெயில் மற்றும் மழையில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், கன்னிமங்கலம் கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை