உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தென் மண்டல பல்கலை கபடி எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்

தென் மண்டல பல்கலை கபடி எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன்

சென்னை: இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கங்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, தென் மண்டல அளவில் பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியை நடத்தின.காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் கடந்த 30ல் துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது.தமிழகம் உட்பட தென் மண்டல அளவிலான 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்று, 'நாக் - அவுட்' முறையில் மோதின.நேற்று நடந்த லீக் சுற்றுகளில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 38 -- 37 என்ற கணக்கில் வேல்ஸ் பல்கலையை தோற்கடித்தது.மற்றொரு போட்டியில் மங்களூர் பல்கலை அணி 62 - - 36 என்ற கணக்கில் மைசூரு பல்கலையை வீழ்த்தியது. வேல்ஸ் பல்கலை அணி 21 -- 10 என்ற கணக்கில் மைசூரு பல்கலையை தோற் கடித்தது.அனைத்து லீக் போட்டிகள் முடிவில், தமிழகத்தின் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடத்தை பிடித்து, 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.தொடர்ந்து தமிழகத்தின் வேல்ஸ், கர்நாடகாவின் மங்களூர், மற்றும் மைசூரு பல்கலை அணிகள், முறையே இரண்டு முதல் நான்காம் இடங்களை பிடித்து அசத்தின.போட்டியில் வெற்றி பெற்று, முதல் நான்கு இடங்களை பிடித்த மேற்கண்ட அணிகள் வரும் 20ம் தேதி முதல், ராஜஸ்தானில் நடக்கும் தேசிய கபடி போட்டியில் பங்கேற்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை