உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரும்பாக்கம் கல்லுாரியில் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு

பெரும்பாக்கம் கல்லுாரியில் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு

சென்னை:பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, பி.ஏ., தமிழ், ஆங்கிலம் மற்றும் பி.காம்., பொது, பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், நிறுவன செயலாண்மை ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.மேலும், எம்.ஏ., தமிழ், எம்.காம்., எம்.எஸ்.சி., கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தம் 420 இருக்கைகள் உள்ளன.கடந்த 2 முதல் 8ம் தேதி வரை, சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நடந்தது. தற்போது, 367 இருக்கைகள் காலியாக உள்ளன. இதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்றும், நாளையும் மற்றும் மூன்றாம் கலந்தாய்வு, 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறும்.இது குறித்து, கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி கூறியதாவது:கலந்தாய்வில் பங்கேற்க, இ - மெயில் மற்றும் அலைபேசி வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பித்தும் தகவல் கிடைக்காதவர்கள், கலந்தாய்வில் பங்கேற்கலாம்.விண்ணப்பிக்க தவறிய மாணவ - மாணவியருக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உரிய சான்றிதழ், ஆவணங்களுடன் வந்தால், கல்வி இயக்ககத்தின், tngasa.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்து தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி