மேலும் செய்திகள்
இன்று இனிதாக 09/02/25
09-Feb-2025
செங்கல்பட்டு,:தாம்பரம் மாநகராட்சியில், மக்கள் குறை தீர்வு சிறப்பு முகாம், வரும் 13ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மண்டலங்கள் வாரியாக மக்கள் குறை தீர்வு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம்கள், மண்டலம் 2ல், குரோம்பேட்டை பிரதான சாலை மண்டல அலுவலகத்தில், 13ம் தேதி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 9,13,14,15,16,17,18,19,20,21,24,26,27,28 ஆகிய வார்டுகளில் நடைபெறும்.மண்டலம் 4ல், தாம்பரம் மேற்கு, அம்பேத்கர் திருமண மண்டபத்தில், மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரை, 32,33,49,50,51,52,53,54,55,56,57,58,59,60,61, ஆகிய வார்டுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பொதுமக்கள் தங்களது கோரிக்கையை, கணினியில் பதிவு செய்ய வேண்டி உள்ளதால், கோரிக்கையின் அனைத்து ஆவணங்களையும் கொண்டுவர வேண்டும்.இந்த முகாம்களில், பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது, உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
09-Feb-2025