உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மண்டல கூடைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம்., வீராங்கனையர் அசத்தல்

மண்டல கூடைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம்., வீராங்கனையர் அசத்தல்

சென்னை, அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், தென்மண்டல பல்கலை இடையிலான கூடைப்பந்து 'சாம்பியன்ஷிப்' போட்டிகள், கேரள மாநிலம், மஹாத்மா காந்தி பல்கலை மைதானத்தில், கடந்த 20ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தன.இதில், தமிழகம், ஆந்திரம், புதுவை, கேரளம், கர்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன.அரையிறுதி வரை 'நாக் அவுட்' முறையிலும், இறுதி சுற்றுகள் 'லீக்' அடிப்படையிலும் நடந்தன. இறுதிச் சுற்றுக்கு தமிழகத்தின் எஸ்.ஆர்.எம்., கர்நாடகாவின் கிறிஸ்ட், கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மஹாத்மா காந்தி ஆகிய பல்கலை அணிகள் முன்னேறின.இறுதிச் சுற்றின் மூன்று 'லீக்' போட்டிகளிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வீராங்கனையர், முதல் 'லீக்' சுற்றில், கோழிக்கோடு பல்கலை அணியை, 65- - 62 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றனர். அடுத்த 'லீக்' போட்டியில், கேரளாவின் மஹாத்மா காந்தி பல்கலை அணியை, 80- - 71 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினர்.கடைசி 'லீக்' சுற்றில், கர்நாடகாவின் கிறிஸ்ட் பல்கலை அணியை, 63 - -57 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, எஸ்.ஆர்.எம்., பல்கலை வீராங்கனையர் சாம்பியன் பட்டம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை