மேலும் செய்திகள்
பர்வதமலை ஏறி இறங்கிய பெங்களூரு மாணவர் பலி
19-Jul-2025
கலசப்பாக்கம்:திருச்சி மாவட்டம், காந்திபுரம் தில்லை நகரை சேர்ந்தவர் மாரியப்பன், 50. இவர், கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். இவரது காரில், கடந்த மாதம், 18ம் தேதி, திருச்சியிலிருந்து மூன்று பேர், வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அந்த காரை திருப்பத்துார் மாவட்டம், புது பூங்குளம் கிராமத்தை சேர்ந்த சாரதி, 27, ஓட்டிச் சென்றார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வழியாக சென்ற கார் கலசப்பாக்கத்தில், செய்யாறு மேம்பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சாரதி மற்றும் காரில் வந்தவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் டிரைவர் சாரதியை ஜாமினில் விடுவிக்க, கலசப்பாக்கம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கோவிந்தன், முதல் தவணையாக சாரதியிடம், 5,000 ரூபாய், இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாய் பெற்றார். இதுகுறித்த வீடியோ வைரலானது. மாவட்ட எஸ்.பி., சுதாகர் கவனத்திற்கு இந்த முறைகேடு சென்றது. இதையடுத்து எஸ்.பி, விசாரணை நடத்தி, எஸ்.எஸ்.ஐ., கோவிந்தனை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.
19-Jul-2025