உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உங்களுடன் ஸ்டாலின் நெல்லிக்குப்பத்தில் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் நெல்லிக்குப்பத்தில் முகாம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில், ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி தலைமையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் குத்துவிளக்கேற்றி, முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள், ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, மின்வாரியத் துறை உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன. விழாவில், மாவட்ட கலெக்டர் சினேகா, காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ