உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

செங்கல்பட்டு:'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் வரப்பெற்ற மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு, மாவட்ட கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில்,'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் வரப்பெற்ற மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்தி குமார் பாடி பங்கேற்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வரப்பெற்ற மனுக்கள் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வரப்பெற்ற மனுக்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத் து துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதி ெஹலன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் ஸ்ரீதேவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை