உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பவுஞ்சூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

பவுஞ்சூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

பவுஞ்சூர்:பவுஞ்சூரில் நேற்று நடந்த நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை செங்கல்பட்டு கலெக்டர் சினேகா துவக்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் கடந்த ஆக., 2ல் துவங்கப்பட்டு, சனிக்கிழமைதோறும், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் பகுதி வாரியாக முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. பவுஞ்சூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் பவுஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் கங்காதரன் தலைமையில் நடந்தது. கலெக்டர் சினேகா முகாமை துவக்கி வைத்து ஆய்வு செய்தார். முகாமில், பொதுமருத்துவம், பல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதய நோயாளிகளுக்கு இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை