உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்தலசயனர் கோவில் கும்பாபிஷேகம் செங்கை சப் - கலெக்டர் ஆலோசனை

ஸ்தலசயனர் கோவில் கும்பாபிஷேகம் செங்கை சப் - கலெக்டர் ஆலோசனை

மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் பிப்., 1ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல், போலீஸ் டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன் ஆகியோருடன், செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா, நேற்று கோவிலில் ஆய்வு செய்தார்.கோவில் பணிகளை பார்வையிட்ட அவர், எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பக்தர்கள், கோவிலுக்குள் நெரிசலின்றி நுழைதல் மற்றும் வெளியேறுதல் குறித்து கேட்டறிந்தார்.தடுப்புகளுடன் வழிப்பாதைகள் அமைக்க நடந்துவரும் ஏற்பாடுகள் குறித்து, அறநிலையத் துறையினர் அவரிடம் விளக்கினர்.பின், அறநிலையத் துறை அதிகாரிகள், தாசில்தார் ராஜேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தடையற்ற மின் இணைப்பு, மின்கம்பி பாதுகாப்பு, தீயணைப்பு நடைமுறைகள், முதலுதவி, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.சிறப்பு பேருந்துகள் இயக்குவது, குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைப்பது குறித்து அறிவுரைகள் வழங்கினார்.சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தர்கள் செல்ல வசதியாக, சாலையின் இருபுறமும் கயிறு கட்டி ஒழுங்குபடுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினார்.பக்தர்களின் வாகனங்களை, மேற்கு ராஜவீதி வழியே அனுமதித்து, அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டும் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.சுற்றுலாப் பேருந்துகளை நகர்ப் பகுதிக்குள் அனுமதிக்காமல், சுற்றுலாவிற்கு தடைவிதிப்பது, கோவில் முன், வரும் 31ம் தேதி பிற்பகல் முதல் பிப்., 1ம் தேதி வரை, ஆட்டோக்கள் நிறுத்தாமல் தவிர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ