பகலில் எரியும் தெருவிளக்குகள் கடுக்கலுார் ஊராட்சியில் அவலம்
செ ய்யூர் அடுத்த கடுக்கலுார் ஊராட்சியில், வேலுார் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு உள்ள தெரு விளக்குகள், தொடர்ந்து எரிந்து வருகின்றன. இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், தேவையில்லாத மின்சார இழப்பும் ஏற்படுகிறது எனவே, பகல் நேரங்களில் மின்விளக்குகள் எரிவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஈ.வேலன், செய்யூர்.