ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
செங்கல்பட்டு:அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், நேரடி மாணவர் சேர்க்கை, கடந்த 23ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.இச்சேர்க்கைக்கு எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 9499055673, 9962986696 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.