மேலும் செய்திகள்
பெண்ணிடம் செயின் பறித்த மூவர் கைது
05-Oct-2025
மறைமலை நகர்: குரோம்பேட்டை லட்சுமிரம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் இஷால் கண்ணா, 18. இவர், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலையில், பி.டெக்., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி காலை, பொத்தேரியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள நண்பரான மகேஷ்வரன் என்பவரை பார்க்க, இஷால் கண்ணா சென்றார். நண்பரை பார்த்து விட்டு முதல் தளத்தில் இருந்து படியில் நடந்து வந்த போது, கால் இடறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பியில், இஷால் கண்ணாவின் இடது கை பட்டுள்ளது. இதில், இடது கை முழுதும் கருகியுள்ளது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இஷால் கண்ணாவின் தந்தை ரங்கநாதன், மறைமலைநகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து, ரங்கநாதன் கூறியதாவது: மின் கம்பிகள் தாழ்வாக சென்றதை, மின் வாரிய அதிகாரிகள் மாற்றியமைக்காததே இந்த விபத்திற்கு காரணம். மூன்று மாதங்களுக்கு முன் இதே விடுதியில், வடமாநில வாலிபர் ஒருவரும், மின்கம்பி கையில் பட்டு படுகாயமடைந்தார். மறைமலைநகர் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர். விபத்து நடந்த பிறகு அவசர அவசரமாக தற்போது மின் கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
05-Oct-2025