உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடிப்படை வசதியின்றி சுப்ராயல் நகரில் அவதி

அடிப்படை வசதியின்றி சுப்ராயல் நகரில் அவதி

திருப்போரூர், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு, சுப்ராயல் நகர் பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இங்கு சாலை, கால்வாய், முறையான குடிநீர் வசதியின்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இங்குள்ள சாலை, மண் சாலையாகி பள்ளம் மேடாக இருப்பதால், மழை நேரத்தில் குளம் போல் மழைநீர் தேங்குகிறது. கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர், கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.அதேபோல், குடிநீர் குழாய்கள் சேதமடைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால், முறையாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் புதிய சாலை, கால்வாய், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என, சுப்ராயல் நகர் பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை