உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோடை மழையால் பருத்தி விவசாயம் பாதிப்பு

கோடை மழையால் பருத்தி விவசாயம் பாதிப்பு

சூணாம்பேடு:கோடை மழையால் சூணாம்பேடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகளின் பூக்கள் உதிர்வதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.சூணாம்பேடு சுற்றுவட்டாரப் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் உள்ளது. சூணாம்பேடு, புதுப்பட்டு, புதுகுடி, மணப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது, 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டுள்ளது.6 மாத பயிரான பருத்தி நடவு செய்து, 3 மாதங்கள் கடந்த நிலையில், தற்போது பூ பூக்கும் நிலையில் உள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், பருத்தி செடியில் பூக்கள் உதிர்ந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி பயிர்களை ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை