கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
திருப்போரூர்:கழிப்பட்டூரில், கல்லுாரி மாணவ - மாணவியருக்கான, 'தமிழ் கனவு' நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்லுாரியில், உயர்கல்வித்துறை சார்பில், 'மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி, நேற்று நடத்தப்பட்டது. செங்கல்பட்டு கலெக்டர் சினேகா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் கர்ணவேல், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சண்முகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, வழக்கறிஞர் அருள்மொழி பங்கேற்று, 'தமிழ்நாட்டின் தொழில் புரட்சி' என்ற தலைப்பில் பேசினார். பல்வேறு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர். விழாவில், திருப்போரூர் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.