உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தாம்பரம்,:தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, வடமாநில நபர்கள் வாயிலாக கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, தாம்பரம் போலீசார், நேற்று முன்தினம், ரயில் நிலையத்தில் கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சையதுல்லா மாலிக், 29, என்பதும், அவரிடம், 1.700 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சையதுல்லா மாலிக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !