உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பகிங்ஹாம் கால்வாயில் வாலிபர் சடலம் மீட்பு

பகிங்ஹாம் கால்வாயில் வாலிபர் சடலம் மீட்பு

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முட்டுக்காடு கிராமத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது. நேற்று கால்வாயோரத்தில் ஆண் சடலம் கரை ஒதுங்கியதை கண்ட கிராமத்தினர், செய்யூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அடுத்த மேத்தா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, 29, என்பது தெரியவந்தது.இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்காட்ட விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியே சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை