உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்லுாரி மாணவர்கள் இடையே தகராறு நாட்டு வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு

கல்லுாரி மாணவர்கள் இடையே தகராறு நாட்டு வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு

மதுரவாயல்: இரு கல்லுாரி மாணவர்கள் இடையே, முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், பேப்பரால் செய்த நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவத்தில், 10 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை, பச்சையப்பன் கல்லுாரி மாணவர் அரசன், 22. மதுரவாயல் ஏரிக்கரையைச் சேர்ந்தவர், எம்.ஜி.ஆர்., சட்டக் கல்லுாரி மாணவர் நவீன்குமார், 23. இருவருக்கும் இடையே, மூன்று மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. இதில், நவீன்குமார், 23, மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, அரசனை தாக்கினர். இதுகுறித்து, தன் கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவனும், நண்பருமான, மதுரவாயலைச் சேர்ந்த, வானகரம் மீன் சந்தையில் லோடுமேனாக வேலை செய்யும் மாயஜோதி, 21, என்பவரிடம், அரசன் கூறியுள்ளார். இதையடுத்து மாயஜோதி, நவீன்குமாரிடம் சென்று பிரச்னை செய்தார். இச்சம்பவத்திற்கு பின், இப்பிரச்னையை தனக்கானதாக கருதிய மாயஜோதி, அவரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்துவந்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை அதிகரித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாயஜோதி, தன் நண்பர்களான விக்னேஷ், 26, அஜித்குமார், 30, ஆஷிக், 19, மற்றும் ஜஸ்டின், 24, ஆகியோருடன், மது போதையில் நவீன்குமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். நவீன்குமாரின் நண்பர்களுக்கும் அங்கு வந்தனர். இருதரப்பும், ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர்.அப்போது, நவீன்குமாரின் நண்பன் சூர்யா, 19, என்பவர், பேப்பரால் செய்த நாட்டு வெடிகுண்டை வீசியதில், விக்னேஷுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரவாயல் போலீசார் வந்து, விக்னேஷ், மாயஜோதி, அஜித்குமார், ஜஸ்டின், ஆஷிக், மதுரவாயல் காமராஜ் நகரைச் சேர்ந்த கார்த்திக், 25, ஆகிய ஆறு பேரை, நேற்று முன்தினமே கைது செய்தனர். நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை சேர்ந்த, நவீன்குமார், எம்.ஜி.ஆர்., பல்கலையில் எம்.பி.ஏ., முடித்த கார்த்திக், 25, மதுரவாயல் சூர்யா, 21, எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த சூர்யா, 19, முத்துக்குமார், 19, ஆகியோரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி