உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தஞ்சாவூர் இளைஞர் சாலை விபத்தில் பலி

தஞ்சாவூர் இளைஞர் சாலை விபத்தில் பலி

மறைமலை நகர்:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில், 21. சிங்கபெருமாள் கோவிலில் தங்கி, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 6:00 மணியளவில், மகேந்திரா சிட்டியில் இருந்து தன் 'யமஹா'ஆர்15' இருசக்கர வாகனத்தில், சிங்கபெருமாள் கோவில் நோக்கி, ஜி.எஸ்.டி., சாலையில் சென்றார்.திருத்தேரி ஏரி அருகில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், முன்னால் சென்ற பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது.இதில், கபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், கபில் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை