| ADDED : மே 30, 2025 02:49 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, ஜே.சி.கே., நகரில் கட்டப்பட்ட, ரேஷன் கடை புதிய கட்டடத்தை திறக்காததால் வீணாகி வருகிறது.செங்கல்பட்டு நகராட்சி, ஜே.சி.கே., நகரில், தனியார் வாடகை கட்டடத்தில், ரேஷன் கடை இயங்கி ருவருகிறது. இங்கு இடவசதி இல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, புதிய ரேஷன் கடை கட்ட, 2021-22ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த புதிய கட்டடத்தை, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளனர்.இதன் காரணமாக தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.பகுதிவாசிகள் நலன் கருதி, ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.