மேலும் செய்திகள்
செல்லியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
11-May-2025
திருக்கழுக்குன்றம், ஈசன் கருணை செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த ஈசன்கருணை கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இக்கோவில், அண்மையில் புனரமைக்கப்பட்டது.தொடர்ந்து, கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி கணபதி பூஜை, கோ பூஜை, நவக்கிரக பூஜைகளுடன் துவங்கியது.இதையடுத்து, நான்கு கால யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னிதியில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் மஹா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பக்தர்கள் மீதும் நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மஹா அபிஷேகம், அம்மன் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
11-May-2025