உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போன் பறிக்க முயன்றவர் பிடிபட்டார்

போன் பறிக்க முயன்றவர் பிடிபட்டார்

தாம்பரம்:தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் மதுசூதனன், 20. இவர், பொங்கல் பண்டிகைக்கு ஆடைகளை வாங்க, நேற்று முன்தினம் தி.நகர் சென்றார். பொருட்கள் வாங்கி விட்டு, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் இரவில் தாம்பரம் வந்தார்.அப்போது அருகில் இருந்த நபர் ஒருவர், மதுசூதனனின் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை திருட முயன்றார். அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து, தாம்பரம் ரயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிபட்டவர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ரகு, 53, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ