உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ் நிலையத்தில் படுத்திருந்தவர் அரசு பஸ் ஏறி உடல் நசுங்கி பலி

பஸ் நிலையத்தில் படுத்திருந்தவர் அரசு பஸ் ஏறி உடல் நசுங்கி பலி

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம்- - கோவளம் சாலையில், கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு, பிராட்வேலிருந்து கேளம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு, மாநகரப் பேருந்து வந்துள்ளது. ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் நிறுத்த, பின்னோக்கி இயக்கியுள்ளார்.அப்போது, பேருந்து நிலையத்தில், அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் படுத்திருந்ததாக தெரிகிறது. அவர் மீது, பேருந்து பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார்.தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் ஆதரவற்ற அடையாளம் தெரியாத நபர் என்றும், அவருக்கு 50 வயது இருக்கலாம் என்றும் தெரிந்தது.பின், இறந்த நபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் வீரய்யா, 47, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை