கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த நல்லம்பாக்கம், கண்டிகை கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளியில், 2.35 கோடி ரூபாய் செலவில், 10 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. அதுபோல் கூடுவாஞ்சேரி, -நெல்லிக்குப்பம் சாலையி ல் உள்ள நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 1.17 கோடி ரூபாய் செலவில் 5 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. இவ்விரு பள்ளிக் கட்டடங்களையும், தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, நேற்று காலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலெட்சுமி, நந்திவரம் - - கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் தண்டபாணி, நகராட்சி கமிஷனர் சந்தானம், பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீவித்யா, நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல, திருக்கழுக்குன்றம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1.89 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்தார். பள்ளியில் நடந்த விழாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றினார்.