மேலும் செய்திகள்
குறைதீர் நாள் கூட்டத்தில் 407 கோரிக்கை மனுக்கள்
05-Nov-2024
செங்கல்பட்டு : செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 167 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில், நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், நில அளவை, மின் கம்பம் மாற்றம், தொழில் துவங்க வங்கிக் கடன், புதிய ரேஷன் கார்டு, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 167 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.
05-Nov-2024