கிணற்றில் குதித்த பெண்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட தேன்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி உமா மகேஸ்வரி, 33.சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக, மின்னல் சித்தாமூரில் உள்ள தாய் வீட்டில் இருந்துள்ளார்.நேற்று, கணவரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வந்தவர், தேன்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள குடிநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.தகவலின்படி வந்த அச்சிறுபாக்கம் தீயணைப்பு துறையினர், மகேஸ்வரி உடலை மீட்டனர். அச்சிறுபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.