மேலும் செய்திகள்
பாரம்பரிய விளையாட்டு போட்டி
15-Jan-2025
திருப்போரூர், திருப்போரூர் அடுத்த, ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள படூர் ஊராட்சி சார்பில், பொங்கல் விழாவையொட்டி, இளவட்டக்கல் துாக்கும் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.முன்னதாக, ஊராட்சி தலைவர் தாரா ஏற்பாட்டில் நடைபெற்ற சமுத்துவ பொங்கல் விழாவில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.தொடர்ந்து, 50 கிலோ எடையுள்ள இளவட்டக்கல் மற்றும் 75 கிலோ அரிசி மூட்டை துாக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் முந்தியடித்து ஆண்களுக்கு நிகராக அசால்ட்டாக இளவட்டக்கல்லையும், அரிசி முட்டையையும் துாக்கினர்.அதைத் தொடர்ந்து கயிறு இழுக்கும் போட்டி, உறியடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
15-Jan-2025