உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு

சிங்கபெருமாள் கோவிலில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன், 36. அதே பகுதியில் எட்டு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார்.இதில் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 29 இளம் பெண்கள் தங்கி, மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு கடந்த 30ம் தேதி சென்றனர்.இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு ஊருக்கு சென்ற சுபத்ரா என்ற பெண் திரும்பி வந்த போது, அறையின் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு லேப்டாப், இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டு இருந்தது. இதே போல, அடுத்தடுத்து ஐந்து வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தும் தெரிய வந்தது.இது குறித்து நரசிம்மன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ