வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருக்குறள் வினாடி வினா போட்டிக்கான செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் இல் உள்ளது
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான முதல் நிலை திருக்குறள் வினாடி - வினா, வரும் 21ம் தேதி நடக்கிறது.கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, திருக்குறள் முதல் நிலை வினாடி - வினா போட்டி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 21ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு நடக்கிறது.இதனால், போட்டியாளர்கள் பிற்பகல் 1:00 மணிக்கு அரங்கிற்கு வர வேண்டும். இறுதி போட்டி, விருதுநகர் மாவட்டத்தில், 28ம் தேதி நடக்கிறது. மேலும் போட்டியாளர்கள் முன்பதிவு செய்ய, 82207 38038 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
திருக்குறள் வினாடி வினா போட்டிக்கான செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் இல் உள்ளது