உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காற்றாடி திருவிழாவால் திருவிடந்தை கோவிலுக்கு ரூ.1.60 லட்சம் வருவாய்

காற்றாடி திருவிழாவால் திருவிடந்தை கோவிலுக்கு ரூ.1.60 லட்சம் வருவாய்

மாமல்லபுரம்:திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் இடத்தை, காற்றாடி திருவிழாவிற்கு பயன்படுத்தியதற்கு வாடகை தொகையாக, கோவில் நிர்வாகத்திற்கு 1.60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கடந்த 14ம் தேதி முதல், 17ம் தேதி வரை, சர்வதேச காற்றாடி திருவிழாவை, மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் நடத்தியது. இந்தியா, மலேஷியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த காற்றாடி கலைஞர்கள், 250க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான காற்றாடிகளை பறக்க விட்டனர். இவ்விழா நடத்த, திருவிடந்தையில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் இடம் பயன்படுத்தப்பட்டது. இதற்கான வாடகையாக, 1.60 லட்சம் ரூபாயை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கோவில் நிர்வாகத்திற்கு அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை