தண்டரை புதுச்சேரியில் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
அச்சிறுபாக்கம்:தண்டரை புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட தண்டரை பேட்டை பகுதியில் கான்கிரீட் கால்வாய் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்டு தண்டரை புதுச்சேரி ஊராட்சி உள்ளது. இங்கு, தண்டரை பேட்டையில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் கிராம சாலை உள்ளது. இந்த சாலையோரத்தை ஒட்டி 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில், மழை காலங்களில் மழை நீருடன், கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் செல்கிறது. எனவே, கிராம சாலையின் இருபுறமும், கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் சிமென்ட் கான்கிரீட் கால்வாய் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.