உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு இன்று நடக்கிறது

டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு இன்று நடக்கிறது

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி நான்கிற்கான முழு மாதிரி தேர்வு, இன்று நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி நான்கிற்கான முழு மாதிரி தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தரை தளம் 'டி பிளாக்'கில், காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடக்கிறது. அனைத்து மாணவ, மாணவியரும் தவறாது பங்கேற்று, பயன் பெறலாம் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை