உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் கல்லுாரியில் இறுதிக்கட்ட சேர்க்கை இன்று கடைசி நாள்

செய்யூர் கல்லுாரியில் இறுதிக்கட்ட சேர்க்கை இன்று கடைசி நாள்

செய்யூர்:செய்யூரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் புதிதாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கடந்த மே மாதம் துவக்கப்பட்டது. இந்த கல்வியாண்டில், ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாணவர் சேர்க்கை துவங்கியது. பல்வேறு கட்டங்களாக கலந்தாய்வுகள் நடந்து, மாணவ - மாணவியர் 218 பேர் சேர்ந்தனர். கடந்த ஜூன் 30ம் தேதி வகுப்புகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காலியாக உள்ள 52 இடங்களுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை, இன்றுடன் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ